மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட 23 ஆவது மாநாடு குத்தாலத்தில் 2 நாட்கள் நடைப்பெற்றது தோழர் ஜி.வீரைய்யன் நினைவரங்கில் செவ்வாய்யன்று துவங்கிய மாநாட்டில் 228 பேர் பிரதிநிதிகளாக கலந்துக்கொண்டனர். தலைமைக்குழுவாக டி.கணேசன், வி.பழனிவேலு, கண்ணகி ஆகியோர் இருந்தனர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் முன்மொழிந்தார்.வரவேற்புக்குழு தலைவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஜி.ஸ்டாலின் வரவேற்று உரையாற்றினார். அரசியல்-ஸ்தாபன-வேலையறிக்கையை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் வாசித்தார். புதனன்று காலை துவங்கிய மாநாட்டில் விவாதம்,தொகுப்புரைக்கு பிறகு 31 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.புதிய மாவட்ட செயலாளராக பி.சீனிவாசன் மீண்டும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக 1, பி.சீனிவாசன்,2.ஜி.ஸ்டாலின், 3 .எஸ்.துரைராஜ்,4.ஏ.வி .சிங்காரவேலன், 5.பி .மாரியப்பன், 6. டி.சிம்சன், 7,ஏ.ரவிச்சந்திரன், 8,சி.விஜயகாந்த்,9.ஜி.வெண்ணிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திரைக்கலைஞர் சூரியாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் பரிசு என சாதிவெறியோடு அறிவித்து சமூக பதற்றத்தை உருவாக்க முயலும் பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் , புதிதாக மாவட்டம் உருவாக்கப்பட்டு ஒரு ஆண்டைக்கடந்தும் கூட ஒவ்வொரு துறைக்கும் தனி அலுவலகங்கள் இல்லாததால் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே உடனடியாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் உடனே திறக்க வேண்டும், பெரும் ஊழலுடன் நடந்ததால் தற்போது நகர சாலைகள் முழுக்க ராட்சச பள்ளங்கள் , ஆங்காங்கே ஓடும் சாக்கடை கழிவு நீரால் கடும் இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக வேறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும், மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளை ஏற்படுத்துவதோடு, தாலுக்கா மருத்துவமனைகளையும் சீரமைத்து, தரம் உயர்த்த வேண்டும். புதிய மருத்துவக்கல்லூரி,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரிகளை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்,செயற்குழு உறுப்பினர்களை அறிவித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உரையாற்றினார். நிறைவாக வரவேற்பு குழு செயலாளரும்,குத்தாலம் ஒன்றிய செயலாளருமான சி.விஜயகாந்த் நன்றிகூறினார்.
செய்தி: ஜமால், மயிலை.