கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில் பாஜக ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிகச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வந்தனர். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காலை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க கோஷங்களை எழுப்பினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.