மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் திறந்து வைத்தார்.
விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் கே. மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் உயர் கல்விக் கழக தலைவர் தங்கப்பழம், பள்ளி நிர்வாகி ஜோனாஸ் குணசேகரன், சபை குருமார்கள் நவராஜ் ஆபிரகாம், ஜான்சன் மான்சிங், சாம்சன் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜான் சைமன் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு அடல் டிங்கரிங் ஆய்வகத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார், மேலும், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தரங்கம்பாடி சீகன் பால்கு இல்லத்தில் உள்ள பழமை வாய்ந்த சீகன்பால்கு பயன்படுத்திய பொருட்கள் மற்றும் தமிழிளான அச்சி ஏடுகள், அச்சு இயந்திரத்தை பார்வையிட்டார். இதில், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.