0
0
Read Time:1 Minute, 12 Second
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ள பெருக்கால் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து ஆற்றின் கரையோரம் உள்ள வெளிச்செம்மண்டலம், சின்னகங்கனாங்குப்பம், பெரியகங்கனாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கொம்மந்தான் மேடு தடுப்பணையில் வெள்ள நீர் அதிக அளவில் செல்வதால் கரையோரங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்புகள் அமைத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.