கொரோனா காலத்தில் ஏற்பட்ட மாணவர்களுக்கு உண்டான கற்றல் இடைவெளியை போக்க தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கிராமப்புற கலைநிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது. கல்வித்துறை சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இல்லம்தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கோட்டாட்சியர் பாலாஜி துவங்கி வைத்தார்.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் நாட்டுப்புறக்கலைஞர்கள் இல்லம்தேடி கல்வி திட்டம் குறித்து வீதி நாடகம், ஒயிலாட்டம், நாட்டுப்புறப்பாடல் வழியாக கற்றல் இடைவெளி குறித்தும், கல்வியின் அவசியத்தை எடுத்துகூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரிய பயிற்றுநர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய பேருந்துநிலையம், பெரிய கடை வீதி சின்ன கடை வீதி உள்ளிட்ட நகரில் மக்கள் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் இல்லம்தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
Read Time:1 Minute, 50 Second