தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் நவம்பர் 26, 2021 73 வது ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு தினம் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவர் டாக்டர் எம்.சிவக்குமார் தலைமையேற்று இந்திய அரசியல் அமைப்பு தின வரலாற்றை விளக்கி பேசினார்.எஸ்.ஷைனி சிவக்குமார் கே.ஆர்.சற்குனம் ஆகியோர் அணைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் ஹச்.சரஸ்வதி, கே.ரங்கநாதன்,கே.ஆறுச்சாமி ஜனசக்தி விநியோகர்,வி.சரஸ்வதி,ஆர்.காமாட்சி,வி.வேலுச்சாமி,எஸ்.கெளதம்,உட்பட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும்,வேட்கைகளையும், எண்ணங்களையும், ஒருமுகமாக பிரதிபலிப்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டம் அதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய மரபுகளையும் அவற்றால் விளைந்த தீமைகளையும் அகற்றி சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதியை அனைத்து மக்களுக்கும் வழங்கிய நாள் என்றும் .
இந்த நல்ல நாளில் சமத்துவம், சகோதரத்துவம்,அரசியல், பொருளாதார,சமூக நீதி அணைவருக்கும் கிடைக்க சபதமேற்றனர்.