0 0
Read Time:1 Minute, 54 Second

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலிலினின் பிறந்தநாளை மயிலாடுதுறையில் திமுக வழக்கறிஞர் அணியினர் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டாடினர்.மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக வழக்கறிஞர்அணி சார்பில் கொண்டாடப்பட்டது.

தனது பிறந்தநாளில் வாழ்த்து விளம்பரங்கள் வைப்பது போன்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து அதற்கு பதிலாக ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவ்வகையில் அவரது பிறந்தநாளை மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம.சேயோன் தலைமையிலான வழக்கறிஞர்கள் மதிய உணவு பரிமாறி கொண்டாடினர்.

இதில், திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அருள்தாஸ், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவதாஸ், கட்சி வழக்கறிஞர்கள் தணிகை.பழனி, முருகவேல், கார்த்திகேயன், மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் காந்தி ஆகியோர் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவினை பரிமாறினர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %