0 0
Read Time:3 Minute, 23 Second

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தற்பொழுதுவரை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலைவரை இடைவிடாது தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மழைநீரில்  மூழ்கிய  மயானம்.! சாலையிலேயே சடலத்தை எரித்த மக்கள்! இது கடலூர் கொடுமை!

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இளமங்கலம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இளமங்கலம் கிராமத்தில் வசித்துவரும் மதியழகன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அக்கிராமத்திள் உள்ள சின்ன ஓடை, பெரிய ஓடை என இரண்டு முக்கிய ஒடைகளிலும் வெள்ள நீரானது அக்கிராம விளை நிலங்கள் மற்றும் சுடுகாடு பகுதி முழுவதையும் சூழ்ந்துள்ளது.

இதனால் உயிரிழந்தவரின் உடல்களை எரிக்க வழியின்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று உயிரிழந்த ராஜேஸ்வரியின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ இடம் இல்லாததால் வேறு வழியின்றி அக்கிராம குடியிருப்பு பகுதி அருகில் கட்டைகளை ராஜேஸ்வரியின் உடல் எரிக்கப்பட்டது.

மேலும், அக்கிராம சுடுகாட்டு பகுதியை மேடு உயர்த்தி, தடுப்பணைகள் கட்டி, மழைக்காலங்களில் நீர் உள்ளே செல்லாதவாறு சுற்று சுவர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுன்றிமி முதல்முறையாக இது போன்ற நிகழ்வு நடைபெறுவதால் அக்கிராம மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %