0 0
Read Time:1 Minute, 51 Second

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவோருக்கு புதிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, பங்களாதேஷ், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்படும்.அதில் நெகட்டிவ் என வந்தாலும், பயணிகள் 7 நாள் வீட்டு தனிமைபடுத்துதல் உட்பட 14 நாட்களுக்கு கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதுதவிர, தமிழகம் பயணமாவதற்கு 72மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சர்வதேச விமான நிலையத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.பயணிகளில் யாரேனுக்கும் அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %