0 0
Read Time:2 Minute, 6 Second

JUSTIN | “ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது; முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்வது போன்றவற்றை முறையாக பின்பற்றினால் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை”-அமைச்சர் மா. சுப்பிரமணியம்

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் பிரேசில் இத்தாலி, பிரேசில் , ஹாங்காங் உள்பட பல நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதும் இதுவரை இருபத்தி மூன்று நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக உலக சுகாதார மைய இயக்குனர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அனைவருக்கும் ஒமிக்ரான் பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்பதும் அதனை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒமிக்ரான் தோற்று பரவிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும், அவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்த உறுதியான தகவல் வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %