0 0
Read Time:2 Minute, 34 Second

வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1.80 லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட ஆற்றில் வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதன் பிறகு நீர்வரத்து குறைய தொடங்கினாலும், ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து நிறுத்தம், மண் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து போலீசார், முன்னெச்சரிக்கையாக பொக்லைன் எந்திரம் மூலம் பேருந்து நிறுத்தத்தை இடித்து ஆற்றில் தள்ளினர். மேலும் ஆற்றின் கரையோரமுள்ள சாலை பலகீனமடைந்து காணப்பட்டதால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டது. இதில் சாலையின் பெரும்பகுதி ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால், அவ்வழியாக முற்றிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செம்மண்டலம் வழியாக சென்ற வாகனங்கள், ஒரு வழிப்பாதையான மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை வழியாக மீண்டும் இயக்கப்பட்டன. நகரில் மிகவும் குறுகலான சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்று வந்ததால், நேதாஜி சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சுமார் 200 மீட்டர் தூரத்தை கடக்க 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %