0 0
Read Time:2 Minute, 15 Second

பெட்ரோல், டீசல் விலையை உயர்வை தமிழ்நாடு அரசு குறைக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் பாரதிய ஜனதா கட்சியினர்‌ மாட்டுவண்டி பேரணியை தொடங்கினர். மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி தலைவர் கஜேந்திரன் தலைமை நடைபெற்ற பேரணியில் மாநில செயலாளர் தங்க.வரதராஜன் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்வை குறைக்காத தமிழ்நாடு அரசை கண்டித்து முழுக்கமிட்டு 50 க்கும் மேற்பட்ட மாட்டுவண்டியில் பேரணியாக தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். 

இந்நிலையில், மணல்மேடு காவல் துறையினர் மாட்டுவண்டி பேரணிக்கு அனுமதி இல்லை என கூறி தடுத்து நிறுத்தினர் தொடர்ந்து தடையை – மீறி மாட்டுவண்டி பேரணி நடத்தினால் கைது செய்வோம் என தெரிவித்து மாட்டுவண்டி பேரணியை தடுத்தனர். இதனால் அப்பகுதி பரபரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாட்டு வண்டி பேரணியை விலக்கி கொண்ட பாரதிய ஜனதாயினர் தங்கள் போராட்டத்தை மாற்றி மணல்மேடு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 100 பாரதிய ஜனதா கட்சியினரை மணல்மேடு காவல்துறையினர் கைது தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %