0 0
Read Time:2 Minute, 50 Second

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் தற்போது விரிவாக்கப் பணிக்காக கட்டிடங்களை  அகற்றும் பணி நடக்கிறது.

இதையொட்டி அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முத்து மாரியம்மன் கோவிலையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க முயற்சி செய்தனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள், கோவில் அருகில் ஒன்று திரண்டனர். 
பின்னர் அவர்கள் கோவில் மற்றும் பள்ளிக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், நில எடுப்பு தாசில்தார் கோமதி மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அகற்றுவது தொடர்பாக 15 தினங்களுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது முத்துமாரியம்மன் கோவிலை மட்டும் இடிப்பதாகவும் கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் முத்துமாரியம்மன் கோவில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %