0 0
Read Time:3 Minute, 47 Second

தமிழகத்தில் யாருக்கும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டு அலைகளின் போது மருத்துவம் மற்றும் மக்கள் சேவையாற்றிய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னை மாவட்ட ஜமாஅத் இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா, மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று காலத்தில் தன்னார்வலர்களின் தொண்டும், சேவையும் முக்கியத்துவம் வாய்ந்ததது

உருமாற்றம் ஓமிக்ரான், பதற்றம் அடைய கூடிய உருமாற்றம் அல்ல. நாள் ஒன்றுக்கு டெல்டா வகை வைரஸ் பரவல் தான்அதிகமாக உள்ளது. 12 ஆய்வகங்களில் RT PCR மரபணு சோதனை மேற்கொள்ளப் படுகிறது. 4502 பயணிகளை பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆகியுள்ளது.

கொரோனா பாசிட்டிவ் கொரோனா வந்தாலே ஓமிக்ரான் என்று சொல்ல முடியாது. கொரோனா பாசிட்டிவ் என்று மட்டும் சொல்லுங்கள். ஓமிக்ரான் பாசிட்டிவ் என சொல்ல வேண்டாம். அந்த 6 பேருக்கும் ஓமிக்ரான் பாசிட்டிவ் என வதந்தியை கிளப்ப வேண்டாம். தமிழகத்தில் 7.4 கோடி பேருக்கான தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குள்பட்டவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். முகக் கவசம் அணிவதை மறக்க வேண்டாம். 1.27 லட்சம் தெருக்களில் 1.25 லட்சம் தெருக்களில் நோய் தொற்று கிடையாது. 100 பேரில் சோதனை செய்தால் 1-க்கும் குறைவானவருக்கே தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கரூர், திருப்பூர் 1.4 என்கிற அளவில் பரவல் உள்ளது.

கான்டாக்ட் டிரேசிங் மாநில எல்லையில் கண்காணிக்க படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலை முழுமையாக கடைபிடிக்கிறோம். தொற்று பாதித்த நபர்களை Contact tracing எடுத்து வருகிறோம். அவருடன் தொடர்புடைய நபர்களையும் கண்காணிக்கிறோம். தமிழகத்தில் தான் 314 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அதில் 12 ஆய்வகங்களில் மரபணு சோதனை செய்யப்படுகிறது.

அதிகரிப்பு டெல்டா வைரஸ் இன்னும் போகவில்லை. அது தான் தற்போது அதிகரித்து வருகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை இருந்தாலும் மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும். 638 பேர் டெங்கு சிகிச்சை மாநிலம் முழுவதும் பெற்று வருகின்றனர் என்றார் ராதாகிருஷ்ணன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %