0 0
Read Time:3 Minute, 17 Second

வடலூர் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 67 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் மூலம் 595 பேரை தேர்வு செய்தனா். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்வடிவு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் முகாமில் தேர்வு செய்யப்பட்ட 595 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், கடலூர் கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கஸ்பர் அருள் மரியராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாவட்ட நல வாழ்வு சங்கத்துக்கு மாவட்ட ஆலோசகர், உளவியாலாளர், சமூகப்பணியாளர், புள்ளி விவர பணியாளர் ஆகிய 4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற நல் எண்ணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் வடலூரில் நடந்த முகாமில் 595 பேருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருவதால் முதல்-அமைச்சர் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. இதுதவிர அரசு தேர்வாணையம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் மூலமும் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %