மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அமிர்தகடேசுவரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமானோர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் இத்திருத்தலத்தில் மட்டுமே ஆயுஷ் ஹோமம், சதாபிஷேகம், மணிவிழா, மற்ற யாகபூஜைகள் நடைபெறுவதால் பல மாநிலங்களில் இருந்து இங்கு வந்து மேற்கண்ட பூஜைகள் செய்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்பு பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மூன்றாம் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புனித நீர் அடங்கிய குடங்கள் சங்குகளும் வைத்து கோயில் குருக்கள் சிறப்பு யாகம் நடந்தினர். பின்னர் புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.