மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் குளங்கள் மற்றும் நீர்நிைலகள் நிரம்பின. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீரோடு கரையோர கிராமங்களில் உள்ள குளத்தில் முதலைகள் புகுந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்தில் நேற்று முன்தினம் காலையில் பொதுமக்கள் குளிக்க சென்றனர். அப்போது குளத்தில் முதலை இருந்ததை பார்த்தனர்.
இதேபோல் அருகில் உள்ள காளியம்மன்கோவில் குளத்திலும் முதலை தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் சீர்காழி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனவர்கள் அனந்தீஸ்வரன், செல்லையா, மற்றும் வனத்துறை ஊழியர்கள், கொள்ளிடம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் ஆகியோர் சோதியக்குடி கிராமத்துக்கு வந்து குளங்களில் ஆய்வு செய்து முதலை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.அதனைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்திய முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து சோதியக்குடிக்கு வந்த வனத்துறையினர் பாப்பாகுளத்தில் இருந்த முதலையை பிடித்தனர். பின்னர் அதை அணைக்கரையில் கொண்டு சென்று விட்டனர்.
Read Time:2 Minute, 15 Second