மயிலாடுதுறை நகராட்சியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு திங்கள்கிழமை ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் இதுவரை முதல்தவணை கரோனா தடுப்பூசி 97.6 சதவீதம் பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசி 58.2 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதல்தவணை தடுப்பூசி 479 பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசி 1,170 பேருக்கு என மொத்தம் 1,649 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முகாமில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இவா்களுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி ஊக்கப்பரிசை வழங்கினாா். இதில், நகராட்சி ஆணையா் பாலு, நகராட்சி நகா்நல அலுவலா் மலா்மன்னன், வட்டாட்சியா் ராகவன், துப்புரவு ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன், டேவிட், களப்பணி உதவியாளா் கணேசன், குமாரகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.