மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு துவக்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுத விவழங்கி வருகிறது.
நாகப்பட்டிணம் கள அலுவலகம் முகவரி: பெருமாள் தெற்கு வீதி, நாகை-திருவாரூர் ரோடு, மலேசியா அப்பார்ட்மெண்ட் எதிரில் நாகப்பட்டிணம-611001மற்றும் தஞ்சாவூர் கிளை அலுவலகம்:2554/C1,N.G.K. அபார்ட்மெண்ட், அருள் தியேட்டர் எதிரில் நாஞ்சிக்கோட்டைரோடு, தஞ்சாவூர் அலுவலகங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 08.12.2021 முதல் 15.12.2021 வரை நடைபெறவுள்ளது. இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி-யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மூலதன மானியம் 6% வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுதத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.75 இலட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் /தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு 04365-225656 7373494331 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் . இரா.லலிதா தெரிவிக்கிறார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.