0 0
Read Time:1 Minute, 57 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது பெருஞ்சேரி. இங்கு தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழைமையான சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரர் ஆலய பாலாலயம் மற்றும் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதரை வழிபட்டுத்தான், தான் தேவர்களுக்கெல்லாம் தலைவராக வேண்டுமென வியாழன் வரம் கேட்டதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதற்காக வியாழன், மயூரநாதரை மயிலாடுதுறையின் பெருஞ்சேரி கிராமத்துக்கு சென்று வழிபட்டதாக கூறப்படுகிறது. வியாழன் மட்டுமன்றி இக்கோயில் சந்திரன், தாரை, சரஸ்வதி தேவி மற்றும் 48,000 முனிவர்கள் யாகம் செய்து வழிபட்ட தலமாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடைசியாக 1999-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அடுத்த கும்பாபிஷேகத்துக்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக இன்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. இதை தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி, கிராம மக்கள் ஒத்துழைப்போடு பாலாலயம் செய்து அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கிவைத்தார். அவருடன் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %