0 0
Read Time:3 Minute, 4 Second

மங்களூர் கனரா வங்கியில் போலி ரசீது வழங்கி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்கள்; தலைமறைவாகினர்

கடலூர் மாவட்டம், மங்களூரில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சிறுப்பாக்கம், மங்களூர், அடரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நமச்சிவாயம் (59), அவரது மகன் சங்கரன் (37) ஆகிய இருவரும் நகை மதிப்பீட்டாளர்களாக கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வங்கியில் புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், உடல் நலக்குறைவால் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நகை மதிப்பீட்டாளர்கள் இருவரும் சேர்ந்து நகைக்கடன் பெற்று வட்டிகட்ட வரும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அந்த பணத்தை வங்கியில் வரவு வைக்காமல் வங்கியில் பணம் பெற்றுக்கொண்டதற்கு வழங்கும் வெள்ளை ரசீது போல் மஞ்சள் நிறத்தில் போலி ரசீது கொடுத்து மோசடி செய்துள்ளனர்.

அதேபோல நகையை மீட்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வங்கி மேலாளர் விடுமுறையில் உள்ளதாக காரணம் கூறி பின்னர் வந்து நகையை பெற்றுக் கொள்ளுமாறு கூறி போலி ரசீது வழங்கி வந்துள்ளனர். புணத்தை பெற்றுக் கொண்டு நகை மதிப்பீட்டாளர்கள் நமச்சிவாயம், சங்கரன் ஆகிய இருவரும் நகையை வழங்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மங்களூர் கனரா வங்கியை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுப்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதுபோன்ற பல்வேறு புகார் வந்து கொண்டு இருப்பதால் பாதிப்பட்டவர்கள் விவரத்தையும், மோசடி செய்யப்பட்ட தொகை குறித்தும் வங்கி மேலாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார் இந்தநிலையில் நகை மதிப்பீட்டாளர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %