மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி, மஞ்சள்வாய்க்கால் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி, மஞ்சள்வாய்க்கால் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா துவக்கி வைத்து கூறியதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2021-22 ஆம் ஆண்டிற்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் செயல்படுத்தவுள்ளது.
மாவட்டத்தில் 10.12.2021 முதல் 15.03.2022 வரை ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 5 ஒன்றியத்திற்கு 100 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல். நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத (CLP) அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்கு வழங்கப்படும். மேலும் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்கள் பதிலளிக்க உள்ளனர். இந்த வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட அவர்கள் துவக்கி வைத்து, கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகளை கால்நடை மருத்துவர்களிடம் வழங்கி. கால்நடை பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட்டு பொது மக்களிடம் வழங்கி, சிறப்பாக கிடேரி கன்றுகளை வளர்த்த 3 உரிமையாளர்களுக்கும், சிறந்த 3 விவசாயிகளுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி, தாது உப்பு கலவைகள் மற்றும் பசுந்தீவன புற்களை வழங்கி, கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் சு.ராஜ்குமார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.சஞ்சீவிராஜ். துணை இயக்குநர் மரு.சுப்பையன், பட்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சி.செல்வமணி, உதவி இயக்குநர் மரு.முத்துகுமாரசாமி, கால்நடை மருத்துவர்கள் மரு.காயத்ரி, மரு.அன்பரசன், மரு.சுதா, மரு.சரவணன், மரு.ரமாபிரபா. மரு.சந்தோஷ் ஜனார்தனன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கெண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.