0 0
Read Time:4 Minute, 40 Second

ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வருகிறது. பல முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே பரிந்துரை செய்துவிட்டது.

முக்கியமாக காசு கொடுத்து தேர்தல் நேரத்தில் செய்தி வெளியிடுவது, பிரமாண பத்திரத்தில் பொய் சொல்லும் வேட்பாளர்களுக்கு 2 வருடம் வரை சிறை தண்டனை கொடுப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

பரிந்துரை:

இந்த நிலையில்தான் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 4 சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. அதன்படி ஆதார் அட்டையுடன் தேர்தல் வாக்காளர் அடைய அட்டையை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைப்பது போல இதையும் இணைக்க முடியும். ஆனால் இது கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் இல்லை:

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை. ஆனால் இதன் மூலம் ஆதார் அட்டையை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி வாக்களிக்க முடியும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சில சோதனை முயற்சிகளை செய்து அது வெற்றிபெற்ற நிலையில் மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை செய்தது. அதை முன்னிட்டே தற்போது ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பலமுறை அதேபோல் ஒரே நபர் முன்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் புதிய மசோதாவின்படி ஒரே நபர் ஒரு வருடத்தில் 4 முறை வரை வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியும். இதற்கு 4 கட் ஆப் டேட்கள் அளிக்கப்படும். இது முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.

அதேபோல் முன்பெல்லாம் ராணுவ வீரர்கள் போன்ற சர்வீஸ் அதிகாரிகள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் போது ஆண் அதிகாரிகளின் மனைவிகள் அவர்களின் வாக்குகளை அளிக்க வசதி இருந்தது. ஆனால் பெண் சர்வீஸ் அதிகாரிகளின் கணவர்கள் இப்படி மனைவிகளின் வாக்குகளை அளிக்க முடியாது. புதிய விதியின்படி சர்வீஸ் அதிகாரிகள் ஆணோ, பெண்ணோ, அவர்களின் வாக்குகளை அவர்களின் இணையர் அளிக்க முடியும் என்ற சமத்துவமான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிகாரம் அதேபோல் நான்காவது மாற்றத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நேரத்தில் எந்த இடத்தையும் பயன்படுத்தும் உச்சபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் பள்ளிகளில் தேர்தல் நடத்துவதை சிலர் எதிர்த்து இருந்தனர். இந்த நிலையில்தான் தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்துவதும், வாக்கு எண்ணவும் எந்த ஒரு இடத்தையும் பயன்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

Source: thatstamil

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %