0 0
Read Time:1 Minute, 26 Second

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ப்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று காலதாமதமாக உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் மணிக்கு 60 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %