0
0
Read Time:1 Minute, 12 Second
கொரோனா பரவலை தடுக்க நாகை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாகையில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியின் ஒரு வகுப்பறையில் உள்ள மாணவ மாணவிகள் 100 சதவீத தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய வேதியியல் துறையை சேர்ந்த 45 மாணவ மாணவிகளுக்கு, சான்றிதழ் கேடயம் கொடுத்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.
“இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவ மாணவிகளிடம் பேசிய அமைச்சர், தங்களுடைய வீட்டில் உள்ளவர்கள் நண்பர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.