1 0
Read Time:3 Minute, 34 Second

சென்னை: நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் இடையே வைரலாகி உள்ளது.

பொதுவாக பல ஆயிரம் டீசல் செலவு செய்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன் எதுவும் கிடைக்காமல் வருவதும், சமயங்களில் லட்சக்கணக்கில் பிடித்துவிட்டு வருவதும் இயல்பான விஷயம். முடிந்த வரை எவ்வளவு மீன் பிடிக்க முடியுமோ பிடித்துவிட்டு வர வேண்டும் என்பதில் மீனவர்கள் உறுதியாக சமயங்களில் அதிர்ஷ்டவசமாக சில மீனவர்கள் விலை உயர்ந்த மீன்களை பிடித்து அதை அதிக விலைக்கு ஏலம் விடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் ஒரு மீனவர் 1 கோடி ரூபாய்க்கு மருத்துவ குணம் கொண்ட மீனை ஏலம் விட்டது குறிப்பிடத்தக்கது.

எப்படி இந்த நிலையில்தான் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்த மீனவர் பெயர் ஜீவா. இவர் கடந்த வாரம் கடலுக்கு சென்றுள்ளார். மீன் பிடிக்க வலை வீசியவருக்கு சில நிமிடங்களில் பெரிய மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.

என்ன மீன் அதிக எடையுடன் இருந்த மீனை சக மீனவர்கள் உதவியுடன் கப்பலில் தூக்கி போட்டுள்ளார். வலையை விரித்திவிட்டு மீனை பார்த்தவருக்கு ஆச்சர்யம். காரணம் அது கற்றாழை மீன். பொதுவாக… அவ்வளவு எளிதாக இது வலையில் சிக்காது. மிகவும் அரிதான வகை.

எடை கரைக்கு திரும்பியவர் மீனை எடை போட்டு பார்த்து இருக்கிறார். மேலும் வியப்பு. காரணம் இது 25 கிலோ எடை இருந்துள்ளது. மீனை அப்படியே கூறு போட்டு விற்பனை செய்தால் கிலோ 700 ரூபாய் வரை மட்டுமே செல்லும். ஆனால் அவரோ அதை ஏலம் விட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஏனென்றால் சிங்கப்பூர், மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் பல்வேறு மருந்துகள், வாசனை திரவியங்கள், தைலங்கள் தயாரிக்க இதன் அடிவயிற்றில் உள்ள திரவம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் விலை உயர்ந்த வைண் தயாரிக்கவும் இந்த திரவம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதை ஏலம் எடுக்க பலர் ஆர்வம் காட்டி உள்ளனர்.

ஏலம் பலர் ஏலம் எடுக்க முன் வந்த நிலையில் இந்த ஒரு மீன் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது. சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக ஒருவர் இந்த மீனை 2.30 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார். இந்த சம்பவம் நாகை மீனவர்கள் இடையே வைரலாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %