0 0
Read Time:4 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கொரோனா தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் கணக்கெடுப்பு, விடுதிகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தார். பயனாளிகளுக்கு ரூ.4650 மதிப்பிலான விலையில்லா சலவை பேட்டிகளை இல்வசமாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பதை உறுதி செய்வதற்கு மாணவர்கள் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் கண்காணிக்கும் பணிகளை துவங்கியுள்ளோம்.

மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ள பல்வேறு போட்டிகளில், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் அனைவரையும் பங்கேற்கவைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கூடுதலாக கடனுதவி வழங்கப்படும்.
கிராமப்புற பெண்களின் கல்வித்தரம் மேம்பட அனைவருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற்படுத்தபட்டோர் நலத்துறை விடுதி கட்டிடங்கள் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விடுதிகள் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு கூடுதல் விடுதிகள் கட்டுவதற்காக ஆய்வு செய்யப்படுகிறது. அதனடிப்படையில், தேவைக்கேற்ப வரும் நிதியாண்டில் கூடுதல் விடுதி வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆணையர் முனைவர்.மா.மதிவாணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஜெயங்கொண்டான் சட்டமன்ற உறுப்பினர் க.சோ.க.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %