0 0
Read Time:2 Minute, 14 Second

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 17ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். இதனை கண்டித்தும் கல்வி கூடங்கள் பயங்கரவாத கூடங்களாக மாறுவதாக கூறியும் SDPI, PFI போன்ற அமைப்புகளை தடைசெய்ய வலியுறுத்தியும் இன்று இந்து முன்னணி பாஜக சார்பில் பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்

அப்போது பேசிய எச்.ராஜா, பல்கலைக்கழக துணை வேந்தர் காளித்தனமாக இருக்க கூடாது எனவும் 17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சுபவீர பாண்டியனை ஏன் அனுமத்தீர்கள்? என கேள்வி எழுப்பினார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் திமுக கூட்டம் நடத்தினால் பல்கலைக்கழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ். ரூட் மார்ச் நடக்கும் எனவும் எச்சரித்தார். மேலும், கூட்டத்தை நடத்தியற்கு துணைவேந்தர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பெண் உரிமை என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சு.ப.வீரபாண்டியன் கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது எனவும் எனவே துணைவேந்தர் உடனடியாக பதிவி விலக வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு கூற வேண்டும் எனவும் கூறினார். ஆர்ப்பாட்டம் முடிவடைந்தை தொடர்ந்து எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %