0 0
Read Time:2 Minute, 58 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் 240 குதிரை திறனுக்கு மேற்பட்ட அதிவேக குதிரை திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகினை கொண்டும், சுருக்குமடி, சுத்துவலை (மாப்புவலை) 40 மி.மீட்டருக்கு மேற்பட்ட கண்ணி அளவு கொண்ட தூர்மடி வலை கொண்டும் மீன்பிடிப்பில் ஈடுபடவும், 5 நாட்டிங் கல் கடல்மைல் தொலைவிற்குள் மீன்பிடிப்பில் ஈடுபடவும் தடை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம்-1983 மற்றும் 2020 மற்றும் அரசாணை எண்.எம்.எஸ்.40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை (4) நாள். 25.03.2000-ன் படி 240 குதிரை திறனுக்கு மேற்பட்ட அதிவேக குதிரை திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகினை கொண்டும், சுருக்குமடி, சுத்துவலை (மாப்புவலை) 40மி.மீட்டருக்கு மேற்பட்ட கண்ணி அளவு கொண்ட தூர்மடி வலை கொண்டும் மீன்பிடிப்பில் ஈடுபடுவதும் மற்றும் 5 நாட்டிங் கல் கடல்மைல் தொலைவிற்குள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மீன்பிடி விசைப் படகுகள் தங்கு தளத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்குள் கரைக்கு திரும்பி விட வேண்டும்.மீறும்பட்சத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி மீன்பிடிபடகுகள் மற்றும் வலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்து ஏலமிடப்படும், மேலும் இவ்வகையான மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை வாயிலாக பெறப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %