இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எந்த மாதிரியான மாஸ்க்குளை பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
கொரோனாவின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவி வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொரோனா 3ஆவது , 4 ஆவது அலையை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஓமிக்ரான் பரவல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 21 நாட்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஓமிக்ரான்
இரு தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டாலும் ஓமிக்ரான் கட்டுக்குள் வரவில்லை என்பதால் மாஸ்க், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். மாஸ்க் எனும் போது கொரோனா முதல் அலை முதல் துணி மாஸ்க்குகள் பிரபலமடைந்தன.
பனியன் துணி
ஏழை எளிய நடுத்தர மக்கள் அன்றாடம் புதிய புதிய மாஸ்க்குகளை வாங்க இயலாது என்பதால் பனியன் துணியால் செய்யப்பட்ட மாஸ்க்குகள் விற்பனை செய்யப்பட்டன. இவை பல வண்ணங்களில் கிடைக்கப் பெற்றன. இதன் வரவேற்பை பார்த்து பெரிய ஆடை நிறுவனங்களும் வேட்டி, சேலைகளுக்கு மேட்சிங்காக மாஸ்க்குகளை தயாரித்து வந்தன.
மாஸ்க் வசதியுடையவர்கள் என் 95 மாஸ்க்குகளை அணிந்தனர். இந்த மாஸ்க்குகளை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கொரோனா முன்களப் பணியாளர்கள் அணிந்தால் போதும் மற்றவர்கள் அணிய தேவையில்லை என்றனர். இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது இரட்டை மாஸ்க்குகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர்.
இரட்டை லேயர்கள்:
இந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் வேகமாக பரவி வரும் போது இரட்டை அல்லது மூன்று லேயர்களை கொண்ட மாஸ்க்குகள் மிகவும் செயல்திறன் மிக்கவை. ஆனால் துணி மாஸ்க்குகள் வெறும் அலங்கார பொருளாகவே இருக்கும். அதன் மூலம் ஓமிக்ரான் ஊடுருவ அதிகம் வாய்ப்புள்ளது. வாய் மற்று்ம மூக்கையும் மூடியிருக்கும்படி மாஸ்க்குகளை அணிய வேண்டும்.
துணி மாஸ்க்:
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மாஸ்க்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. எனவே துணி மாஸ்க், என் 95 மாஸ்க் , பில்ட்ரேஷன் இருக்கும் மாஸ்க்குகளை அணிய வேண்டாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். சர்ஜிக்கல் மாஸ்க்குகளை அணியலாம்.