0 0
Read Time:2 Minute, 19 Second

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வையங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் ஒரு தலைமை ஆசிரியர், 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் நேற்று வழக்கம்போல், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டது.

முட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 6-ம் வகுப்பு மாணவன் பிரதீஷ் (வயது 11), 7-ம் வகுப்பு மாணவன் பாலமுருகன் (12), மாணவி கார்த்திகா (12), 8-ம் வகுப்பு மாணவர்கள் நவீன்குமார் (13), பால்ராஜ் (13), பிரபாகரன் (13), ராம்கி (13), அன்பரசன் (13), நிதிஷ் (13), ஆதித்யா (13) ஆகியோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆசிரியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மயக்கம் ஏற்பட்ட 10 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் கோகிலா, திட்டக்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வி, மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆவினங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %