1 0
Read Time:1 Minute, 51 Second

சென்னை: பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் காலமானார். அவருக்கு வயது 78.

மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையாவின் இளைய மகன் மாணிக்கவிநாயகம். இவர், பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்களையும் பாடியுள்ளார்.

திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அவரின் இறுதி அஞ்சலி இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %