17-ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆண்டு டிசம்பர் 26 ல் உலகை உலுக்கிய சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு புதுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், கடற்கரையில் உயிர் நீத்தவர்களுக்கு பால் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா பேரவை துணை செயலாளருமான பி.எஸ்.அருள், மாவட்ட கழக பொருளாளர் தோப்பு கே.சுந்தர், ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரெங்கம்மாள், ரவி, ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் மாரிமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் வசந்த், அம்மா பேரவை சந்தர் ராமஜெயம், பொதுக் குழு உறுப்பினர் சிவ.சுங்காரவேல், துணை செயலாளர் இக்பால், மலைமோகன், இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், கிள்ளை தமிழரசன், கிராம தலைவர் சுப்பிரமணி, நிர்வாகிகள் ஜெய்சங்கர், கல்யாணம், சிவக்குமார், நாகராஜன், மதி, ரெயில் பாஸ்கர், சக்கரவர்த்தி, கணேசன் மற்றும் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.