நாகப்பட்டினம் விற்பனைகுழு கீழ் இயங்கும் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனைகூடத்தின் சார்பில் மத்திய அரசின் மின்னனு தேசிய சந்தை திட்டத்தை மாநில அரசின் ஆணையின்படி தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகதுறை தலைமை அலுவகத்தில் இருந்து காணொலி மூலம் விவசாயிகள் மற்றும் வியபாரிகள் மின்னனு தேசிய சந்தையின் மூலம் எவ்வாறு பயன் பெறலாம் என விளக்கி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சுமார் 100-க்கும் மேலான விவசாயிகள், வியபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் விளை பொருட்களை விவசாயிகள் விற்பனை கூடத்தின் மூலம் விற்று அதிக லாபம் பெறவேண்டுமாய் துண்டு பிரசுரம் கொடுத்து விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் கூறுகையில் விவசாயிகளின் விளை பொருட்களான நெல், நிலகடலை, பருத்தி, தேங்காய், கரும்பு வெல்லம், பச்சபயறு, உளுந்து, மிளகாய், கம்பு, போன்ற விளைபொருட்களை விற்பனைகூடத்திற்க்கு எடுத்து வந்து விற்று பயன் பெற வேண்டும் எனவும், இருப்பு வைத்து பொருளீட்டுக்கடன் குறைந்த வட்டியில் 5% பெற்று அதிக விலை கிடைக்கும் காலங்களில் விற்று பயன் அடையலாம் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் பயன் உள்ளதாக கூறி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து நன்றி கூறினர்.