0 0
Read Time:2 Minute, 48 Second

மீன் வளத்தை பெருக்க ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஜூன் மாதம் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற இழுவலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக குதிரை திறன் உள்ள இயந்திரங்களைக் கொண்டும், 40 எம்எம் அளவிற்கும் குறைவான வளையங்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும், ஐந்து நாட்டிக்கல்குள் மீன் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. கட்டுப்பாடுகளை மீறி மீன்பிடித்த மீனவர்களின் படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 5 மாதமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ஐபி வகை விசைப்படகு மீனவர்கள் இன்று தங்கள் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி, கடலூர் முதுநகரில் உள்ள மீன்வளத் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் ஓ.டி சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம் அக்கரைக்கோரி, என 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒருங்கிணைந்து இழுவலை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரியும், ஆளும் தி. மு. க. அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கையில் பதாகைகளை ஏந்தி பெண்கள், குழந்தைகள் என மீனவ குடும்பங்கள் தமிழக அரசை கண்டித்தும், மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்காதே என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் மனுவாக அளித்தனர். அடுத்த வருடம் 2022க்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் எச்சரித்தனர்.

நிருபர்: ஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %