0 0
Read Time:4 Minute, 26 Second

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மன்னம்பந்தல் தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இம்முகாமில் 611 வேலைநாடுநர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களின் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி கூறியதாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்டத்தில், தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 76 முன்னனி தனியார்த்துறை நிறுவனங்கள் பங்கேற்றனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டம் மற்றும் பட்டயம் படித்த, 18 முதல் 35 வயதுடைய 1865 ஆண்கள் மற்றும் 2430 பெண்கள் இருபாளர்களும் மொத்தம் 4295 வேலைநாடுநர்கள் பதிவு செய்து கொண்டு முகாமில் தங்களின் கல்வி தகுதிக்கேற்ப நிறுவனங்களின் நேர்காணல்களில் பங்கேற்றனர். மொத்தம் 611 வேலைநாடுநர்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

மீதமுள்ளவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக அழைக்கப்பட்டு கல்வி தகுதி, பணி அனுபவம் போன்றவைகளை பொறுத்து நேர்கணல் வாயிலாகவும். வேலைவாய்ப்புத்துறையின் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக அவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் பொருட்டு தேவையான பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநாடுநர்கள் சொந்த மாவட்டத்தில் வேலை வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொண்டு, மாநிலம் மற்றும் நாட்டின் எந்த பகுதியிலும் சென்று வேலை செய்து திறமைகளை வளர்த்துக்கொண்டு மேண்மேலும் வளர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் நா.கவிதப்பிரியா, திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் எம்.சந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் எம். ஹேமலதா. தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் யுவன்சியா, சரவணன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %