0 0
Read Time:2 Minute, 6 Second

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் தஞ்சாவூர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு விழா தனியார் மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு பாண்டிச்சேரி மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலக இயக்குனர் காமராஜ், ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரகுமார், செம்பனார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு கல அலுவலர் அருள்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
முன்னதாக மாவட்ட திட்ட இணை இயக்குனர் முருகண்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடுதல், மத்திய அரசின் கழிப்பிட வசதி திட்டம் மூலம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்தல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அனைவரும் வங்கி கணக்கு தொடங்குதல், முன்னோடி வங்கிகளின் மூலம் கடன் வசதி பெறுதல் மற்றும் மண் வளம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி வாயிலாக கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %