0 0
Read Time:4 Minute, 37 Second

குப்பை போன்ற மேனியை தூய்மையாக்குவதால் குப்பை மேனி என்று அழைக்கப்படும் “குப்பைமேனி இலை பயன்கள்” பற்றி பார்க்கலாம்.

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். இதன் இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.

குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து, குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

தோல் நோய்களுக்கு விரைந்து நிவாரணம் தரும் குப்பைமேனி...!

குப்பைமேனி இலை பயன்கள்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்
குடல் புழுக்கள்
சுவாசம் மற்றும் மலச்சிக்கல்
தோல் நோய்கள்
உடல் ஆரோக்கியம்
சளி இருமலை குணப்படுத்தும்
மூல நோயை குணப்படுத்தும்
முகத்தின் அழகை மேம்படுத்துகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மருத்துவ பயன்கள்

குப்பைமேனி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

தோல் நோய்கள் குணமாக, இதன் இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும்.

அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வரலாம்.

குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுக்க வேண்டும். அதனை இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.

குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக்கொண்டு, வாணலியில் ஒன்றாக விட்டு, சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும்.

வண்டுக்கடி வீக்கம் குணமாக இலையை அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப்போட வேண்டும்.

குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணிநேரம் ஊறவைத்து, கழுவி வரலாம். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை பின்பற்றி வரவேண்டும்.

பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில் 2 அல்லது 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும்.

குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணிநேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும். எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

குப்பைமேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.

குப்பைமேனியின் 10 இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %