0 0
Read Time:4 Minute, 24 Second

’’கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 43 கொலை வழக்குகளில் 42 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 51 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன’’

நாளை தமிழகம் முழுவதும் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதேபோன்று கடலூரிலும் புத்தாண்டு கொண்டு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் குற்ற சம்பவங்கள் குறித்தும் கைது நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விடுத்துள்ள அறிக்கையில்,

2021 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிபறி. திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 236 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, களவாடப்பட்ட ரூபாய் 1,79.96,172 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 43 கொலை வழக்குகளில் 42 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 51 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. குடிபோதையில் வாகனம் ஒட்டிய 253 நபர்கள் மீதும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 23083 நபர்கள் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்ற வாகன வழக்குகள் 1766 என மொத்தம் 4.73.132 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 39,07,424 வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

426 சாலை விபத்து வழக்குகளில் 445 நபர்கள் இறந்துள்ளனர். 2020 ஆண்டு நடந்த 448 சாலை விபத்துகளில் 512 நபர்கள் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் போக்சோ குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் போக்சோ சிறப்பு மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கற்பழிப்பு. வரதட்சணை, பெண் கடத்தல் போன்ற குற்ற வழக்குகளில் 426 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் 388 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 533 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 91.10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 9,11,600 ஆகும். மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை வழக்குகள் 703 பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 714 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 6600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 59,07,600 ஆகும். கடலூர் மாவட்டத்தில் மது கடத்துவோர், மது விற்பனை செய்வோர் என் 9919 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,094 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 21,278 லிட்டர் சாராயம். 50,043 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %