0 0
Read Time:4 Minute, 5 Second

தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தஞ்சாவூர் சரகத்தில் 2021-ம் வருடத்தில் மட்டும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 366 ரவுடிகள் கைது செய்யபட்டும், 1178 ரவுடிகளுக்கு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றும், திருட்டு மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது 981 வழக்குகள் பதியப்பட்டு, 77% திருட்டுபோன பொருட்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

கஞ்சா குற்றங்கள் தொடர்பாக 444 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 634 கஞ்சா குற்றவாளிகளை கைது செய்தும், 1400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டும், குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை தொடர்பாக 6474 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 6512 குற்றவாளிகளை கைது செய்தும், வெளி மாநில மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 390 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 416 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மணல் திருட்டு சம்மந்தமாக 1392 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1961 குற்றவாளிகளை கைது செய்தும். அவர்களிடமிருந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் உட்பட 1773 வாகனங்களை பறிமுதல் செய்யபட்டுள்ளன. கள்ளசாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது 20879 வழக்குகள் பதியப்பட்டு 21240 குற்றவாளிகளை கைது செய்தும், அவர்களிடமிருந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் உட்பட 976 வாகனங்களை பறிமுதல் செய்யபட்டுள்ளன.

மேற்கண்ட குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த குற்றவாளிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 156 குற்றவாளிகளும், திருவாரூர் மாவட்டத்தில் 32 குற்றவாளிகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 43 குற்றவாளிகளும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 குற்றவாளிகளும், ஆக மொத்தம் தஞ்சாவூர் காவல் சரகத்தில் 256 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை ஒப்பிடுகையில் சென்ற வருடம் 2021-ல் அதிகபட்சமாக 256 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக விரோத குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை தனிப்படைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகளால் ரவுடிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக கொலை, கொள்ளை மற்றும் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %