கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி. மீட்டர் மழை பதிவானது.
விவசாயிகள் கவலை
தென் தமிழக கடற்கரையில் சுமார் 4.8 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் கடலூரில் காலை முதல் இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்தது. அதிகாலை வரை சில இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வயல்வெளி களிலும் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழை அளவு
இதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகர், லால்பேட்டை, புவனகிரி, குப்பநத்தம், விருத்தாசலம், தொழுதூர், வேப்பூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
லால்பேட்டை – 66
கீழசெருவாய் – 58
லக்கூர் – 30.2
தொழுதூர் – 21
விருத்தாசலம் – 14
வேப்பூர் – 13
குப்பநத்தம் – 11.6
புவனகிரி – 12
சிதம்பரம் – 10.8
மே.மாத்தூர் – 10
அண்ணாமலைநகர் – 9
காட்டுமயிலூர் – 8
கொத்தவாச்சேரி – 8
குடிதாங்கி – 7.5
பண்ருட்டி – 5.3
குறிஞ்சிப்பாடி – 5
சேத்தியாத்தோப்பு – 4.4
ஸ்ரீமுஷ்ணம் – 4.1
வடக்குத்து – 3
கடலூர் – 2.5
கலெக்டர் அலுவலகம் – 2.4