மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் செல்பொன் தொலைந்துவிட்டதாக கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள் தொலைந்துபோன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் சைபர்கிரைம் போலீஸ் தலைமை காவலர் சுதாகர் மற்றும் காவலர்கள் ரவிச்சந்திரன், எழிலன் ஆகியோரின் தீவிர முயற்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிமையாளர்களால் அடையாளம் காண்பிக்கப்பட்ட செல்பொன்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஒப்படைத்தார்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல் போன்கள் தொலைந்து போனாலும் திருடப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்து சி.எஸ்.ஆர். மனு காப்பியை வாங்கிக் கொண்டால், செல்போன்கள் ஒப்படைப்பதற்கு சுலபமாக இருக்கும் என்றும்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் கடத்தல் கஞ்சா குட்கா, கள்ளச்சாராய விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என்றும், தகவல்தரும் பொதுமக்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் குற்றமில்லாத மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
செய்தி: ராஜா, மயிலை