மயிலாடுதுறை ரயில் நிலையம் அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாக இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பேருந்துகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்து செல்லுகின்ற நிலையில், மேற்படி மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு மயிலாடுதுறை மட்டுமல்லாது தரங்கம்பாடி பூம்புகார் மணல்மேடு போன்ற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்தும் மக்கள் வருகின்ற சாலையாக இருப்பது காவேரி நகர் முதல் ரயிலடி ஆஞ்சநேயர் கோயில் சாலை, சாரத் தட்டை தெரு ஆகிய சாலைகள் ஆகும். ஆனால் இச் சாலைகள் மிகவும் மோசமாகி, ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு மக்கள் பயன்படுத்திட இயலாத மண் சாலைகளை விட மோசமாக காணப்படுகின்றது.
மேலும் இருசக்கர வாகனங்களில் அவசரம் அவசரமாக ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் பள்ளங்களில் தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்ற சம்பவங்கள் ஆங்காங்கே அன்றாடம் நடக்கின்றது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலையை உடனடியாக அதிகவனம் செலுத்தி தரமான சாலையாக மேம்படுத்தி தர நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.