தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் மழையினால் அழிந்துபோன நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும். 2020 – 2021 பிரீமியம் செலுத்தி விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அப்போது போலீசார் அவர்களை தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தியபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடுப்புகளை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புக்காக மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
Source:Thanthi