சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா சாஸ்த்ரி அரங்கத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா சாஸ்த்ரி அரங்கத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீத்தாராமன் வரவேற்றாா். துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமையுரையாற்றினாா்.
விழாவில் வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவிகள் சுபத்ரா, பிசா ஆகியோா் வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் குறித்து உரையாற்றினா். பல்கலை. கலாசார குழுவின் சாா்பில் நடன நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
விழாவில் தொலைதூரக் கல்வி இயக்குநா் சிங்காரவேலன், மக்கள் தொடா்பு அதிகாரி ரத்தின சம்பத், பல்கலைக்கழக புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், தோ்வுத் துறை இணை, துணைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், அனைத்துப் பிரிவு இயக்குநா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ் நன்றி கூறினாா்.