0 0
Read Time:2 Minute, 59 Second

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்படும் கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாகஇ திமுக அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.7) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இதுகுறித்த கேள்வியை திமுக சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் மு. பன்னீர்செல்வம் எழுப்பினார்.

அப்போது அவர், கொள்ளிடம்-சீர்காழியிலிருந்து மருத்துவக் கல்லூரிகள் 70 முதல் 100 கி.மீ. தொலைவில் இருப்பதால், புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து மருத்துவக் கல்லூரி தொடங்கும் கோரிக்கையை வைத்தார். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்புடன் ஏற்கெனவே 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டு இந்தக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மயிலாடுதுறை, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் ரூ.350 கோடியிலிருந்து ரூ.400 கோடி வரை செலவாகி இருக்கிறது. அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் உரியக் கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவக் கல்லூரியை முதல்வர் கட்டித்தருவார்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %