0 0
Read Time:2 Minute, 12 Second

கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் நகராட்சியில் அரசு ஆணையின் படி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதையும், முதல் தளத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையத்தை வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்களின் நலன் கருதி தரை தளத்திற்கு மாற்ற வேண்டும் உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10.01.2022 அன்று நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் (பொ) முத்து கணேஷ், பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், மேலாளர் அசோக்குமார் ஆகியோர், கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்க செயலாளர் தடயம் பாபு, மாவட்ட இணைச் செயலாளர் ராஜி, பொருளாளர் வேணுகோபால், அமைப்பாளர் எம். ஆர்.மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர்களான ராம் மனோகர், இளங்கோ, நிர்வாகிகளான கே.லோகநாதன், பன்னீர்செல்வம், ஜெய்கணேஷ், செந்தில், ரவிதாஸ் ஆகியோரை நகராட்சி அலுவலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த சமாதானக் கூட்டத்தில், நகராட்சிக்கு புதிய ஆணையர் வந்ததும் உடனடியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், அதற்கான நிர்வாகரீதியிலான காரணங்களையும் விளக்கினார்கள். அதனை ஏற்று வரும் 10.01.2022 திங்கட்கிழமை அன்று நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

என தெரிவித்துள்ளனர்.

Source: Thadayam

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %