ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1,000 என நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
ஆன்லைனில் tnsand.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து மணல் பெறலாம் எனவும் அறிவிப்பு.
தமிழகத்தில் பொது மக்கள் ஆற்று மணலை, ஆன்லைனில் பதிவு செய்து பெறும் எளிய முறையை அறிமுகம் செய்துள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளது.
அமைச்சர் துரை முருகன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் புதிதாக வீடு கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் பிற கட்டிடப் பணிகளை சிரமம் இன்றி மேற்கொள்வதற்கு மணலை எளிமையாகப் பொதுமக்கள் பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தர்.
அதைச் செயல்படுத்தும் வகையில் பொதுமக்கள் இணைய வழியில் மணலுக்கான பணத்தைச் செலுத்தி சிரமமின்றி மணலை எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் பிறபகல் 2 மணி வரையில் பொது மக்கள் பதிவு செய்ததற்கான மணல் விநியோகம் செய்யப்படும். மீதம் உள்ள மணலை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் இருப்பை பொருத்து வழங்கப்படும்” என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆற்று மணலை ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
tnsand.in என்ற இணையதளம் அல்லது TNsand என்ற செயலி மூலம் ஆன்லைனில் மணல் ஆர்டர் செய்யலாம். பணத்தையும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.