0
0
Read Time:1 Minute, 21 Second
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் தொற்றுகள் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு முடிவு செய்தது. அதன்படி, சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக தொடங்கியது.
அந்த வகையில் ,கடலூரில் 60 வயதுக்கு மேற்பட்ட முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் நோயாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே இரண்டாம் தவணைக்கு செலுத்தி பின் 9 மாதங்கள் ஆனவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்திக் முன்வர வேண்டும் என்றும், மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் நோய்த்தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.