0 0
Read Time:3 Minute, 29 Second

பூஸ்டர் தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்தி கொள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி (Booster vaccine) செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. ஜனவரி 10ம் தேதி தொடங்கி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை யார் யார் செலுத்திக்கொள்ளலாம் என்ற சந்தேகம் பரவலாகவே உள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்தப்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த செல்லும் பொழுது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மாநகராட்சி தடுப்பூசி முகாமில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை மற்றும் ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்தி கொள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) நேரடியாக சென்று செலுத்திக் கொள்ளலாம்.

இந்த தடுப்பூசி மையங்களின் விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்திக்கொள்ளலாம்.

இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மற்ற ஊர்களில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரில் சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

Source:N18

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %